மீஞ்சூர் அருகே, வீட்டின் உள் வந்த பாம்பை பிடிக்க, உபகரணங்கள் மற்றும் ஆட்களும் இல்லை, என வனதுறை அலுவலர்கள் கைவிரிப்பு…
1 min read
திருவள்ளுர் மாவட்டம், மீஞ்சூர் அருகே உள்ள அனுப்பம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன், அவர் மற்றும் அவருடைய சகோதரர்கள் பாண்டியன், சசிகுமார் ஆகியோரும் அருகருகே உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று இரவு 7 மணியளவில் சசிகுமார் வெளியில் சென்றுவிட்டு, வீடு திரும்பிய போது, சுமார் 6 அடிக்கும் மேல் இருக்க கூடிய பெரிய பாம்பு ஒன்று செல்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அதை அடிக்க முயன்ற போது அவர்கள் வீட்டின் அருகே உள்ள செடி மறைவில் அந்த பாம்பு மறைந்து கொண்டது, உடனே பக்கத்து வீட்டில் உள்ள, கூட்டுறவு சங்க தலைவர் உமாமகேஸ்வரன் வந்து, அருகில் குழந்தைகளுடன் பலர் வீடுகளில் இருப்பதால், பாம்பை நாம் விரட்டினால் யாருடைய வீட்டின் உள்ளாவது சென்றுவிட வாய்ப்பு உள்ளது. ஆகவே, யாரும் அந்த பாம்பை அடிக்க முயற்ச்சிக்க வேண்டாம், என கூறிவிட்டு,வனத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டார்.

ஆனால், திருவள்ளுர், செங்குன்றம், மாதர்பாக்கம், கும்முடிபூண்டி, என அனைத்து இடங்களிலும் உள்ள வனதுறை அலுவலர்கள் ஒருவரை ஒருவர் மாறிமாறி இது எங்கள் கட்டுபாட்டில் இருக்கும் இடம் இல்லை எனவும், சிலர் பாம்பை பிடிக்கும் உபகரணங்கள் இல்லை எனவும், கூறி தட்டி கழித்தனர். பின்னர் இரவு 10 மணியாகிவிட்ட நிலையில் அனைவரும் தங்கள் வீட்டின் உள் செல்ல பயந்து போய் இருந்ததால், உமாமகேஸ்வரன் ஒரு ஜேசிபி இயந்திரத்தை வரவழைத்து, பாம்பு மறைந்த புதர் பகுதியை சுத்தம் செய்த போது, அங்கு நான்கு அடிக்கும் கீழே இருந்த, ஒரு மண் பொந்தில் பாம்பு மறைந்து இருந்தது. அதை வெளியில் எடுக்கும் முயற்ச்சியில் அதே பகுதியில் மறைந்து இருந்த மேலும் பல பாம்புகள் திசைக்கு ஒன்றாக ஒடின, இதை வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த பலர் அங்கிருந்து ஓடிவிட்டனர். முடிவில் இயந்திரத்தில் சிக்கிய சில பாம்புகள் இறந்து போயின, பல பாம்புகள் அருகில் இருந்த முள்புதர்களில் ஓடி மறைந்தன.

நிழல்.இன் – 8939476777