வந்தவாசி அருகே, சுடுகாட்டு பாதை இல்லாமல் சடலத்தை விவசாய நிலத்தில் தூக்கி செல்லும் அவலம்…
1 min read
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த செம்பூர் கிராமத்தில் சுடுகாட்டுப் பாதை இல்லாததால் சடலத்தை வயல் வெளியில் தூக்கி செல்லும் அவலம் 40 ஆண்டுகளாக இருந்து வருகிறது.

வந்தவாசி அடுத்த செம்பூர் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த நாற்பது வருடங்களுக்கு மேலாக சுடுகாட்டுப் பாதை இல்லாததால் செம்பூர் பகுதியில் ஏதேனும் இறப்பு ஏற்பட்டால், அந்த சவத்தை தூக்கிக் கொண்டு வயல்வெளி வழியாக மிகவும் சிரமத்துடன் எடுத்து செல்கின்றனர்.

இது சம்பந்தமாக செம்பூர் கிராம மக்கள் பலமுறை மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் மனு அளித்தும், எந்தவிதமான நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் செம்பூர் கிராம மக்கள் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர்.இந்த நிலையில் செம்பூர் கிராமத்தில் நேற்று முன்தினம் வசந்தம்மாள் என்பவர் இறந்து விட்டார்.

அவரது சடலத்தை வயல் வழியாக எடுத்து செல்ல வேண்டிய அவல நிலை இருந்து வருகிறது. அதனால் அப்பகுதி இளைஞர்கள் தங்கள் கிராமத்தின் பெருமையை பேச வேண்டிய நாங்களே, எங்கள் கிராமத்தில் சுடுகாடு பாதை கூட இல்லாத நிலையை வெளியுலகுக்கு வெளிச்சம் போட்டு காட்ட வேண்டிய நிலை உள்ளது. இது, எங்களுக்கு தலை குனிவாக உள்ளது. என, அப்பகுதி இளைஞர்களான சசிகுமார், ஜெயவர்மன் மற்றும் அவர்கள் நண்பர்கள் கூறி வருந்தினர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல்.இன் – 8939476777