கானாடு ஏரியில்,விவசாய நிலங்கள் பாதிப்பு, வீடுகளுக்குள் தண்ணீர் புகும் நிலை, கிராம மக்கள் அச்சம்…
1 min read
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகாவிற்கு உட்பட்ட மீமிசல் அருகே உள்ள கானாடு கிராமத்திற்கு சொந்தமான ஏரியில் உள்ள நீர் வெளியாவதற்கான சரக்கை எனும் வடிகால் கட்டப்பட்டுள்ளது.

கானாடு கிராமமக்கள் அதனை நீர்பிடிப்பு அளவுக்கு மேல் மணல் மூட்டைகளை அடுக்கி தண்ணீர் தேக்கி வைத்துள்ளதால், ஏரியின் உட்புறப் பகுதியில் அமைந்துள்ள கிராமமான கண்ணாக்கூர் கிராமத்தில் சுமார்
30 ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படு உள்ளது. மேலும், கண்ணாக்கூர் கிராமத்தில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து,
ஆவுடையார் கோயில் வட்டாட்சியர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, கண்ணாக்கூர் கிராம பகுதி பொதுமக்கள் அறந்தாங்கியில் உள்ள பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு உதவி செயற்பொறியாளர் அலுவலகம் முன்பாக கிராம மக்கள் முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செய்திகள் – ஆனந்த்
நிழல்.இன் – 8939476777