எல்லாபுரம் ஒன்றியம், கோடுவேலி ஊராட்சியில், உயர் கோபுர விளக்குகள் நிறுவபட்டது…
1 min read
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் கோடுவேலி ஊராட்சிக்குட்பட்ட காரணி சாலையில், மற்றும் மாகரல் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் எம்.குழந்தைவேல் 2020-21 ஆண்டின் போது நிதியிலிருந்து ரூபாய் 8 லட்சம் மதிப்பிலான, 2 உயர்கோபுர மின் விளக்குகள் இயக்க விழா நடைபெற்றது.

இதில், சிறப்பு அழைப்பாளராக எல்லாபுரம் ஒன்றிய கழக செயலாளரும் முன்னாள் திருவள்ளூர் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவருமான பி.ரவிச்சந்திரன் கலந்து கொண்டு 2 உயர் கோபுர மின் விளக்குகளை ஸ்விட்ச் ஆன் செய்து இயக்கி வைத்தார்.

இதில், தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் மகேந்திரன், அவைத் தலைவர் தயாளன் மாகரல் ஊராட்சிமன்ற தலைவர் குமுதா செல்வம், கூட்டுறவு சங்கத்தின் தலைவர் பன்னீர்செல்வம், குருவாயல் ஒன்றியக்குழு உறுப்பினர் தட்சிணாமூர்த்தி நிர்வாகிகள் பிரகாஷ், ஆகியோர் உட்பட, வார்டு உறுப்பினர்கள் எம். சண்முகபிரியா மதன்,
ஆர்.பிரகாஷ், என்.அன்பு, தம்பிகள் இரா உதயராஜ் தியாகு,ராஜசேகர்,
டிஜிட்டல் வேலன், நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – சீனிவாசன் – நிழல்.இன் -8939476777