January 28, 2021

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு ஊராட்சியில், ஓர் ஆண்டு நிறைவு குறித்த ஆலோசனைக் கூட்டம்…

1 min read

திருவள்ளுர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியம், பழவேற்காடு ஊராட்சியில் ஓர் ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு, அந்த ஊராட்சியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் மாலதி சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், கடந்த ஆண்டில் நடைபெற்ற பணிகளான பழவேற்காடு மீன் மார்க்கெட்டிற்கு சாலை,பசியாவரம் கலைஞர் நகர் கிராமங்களுக்கு சுடுகாடு பாதை, பழவேற்காட்டில் முக்கிய இடங்களில் நான்கு உயர்மின் கோபுர விளக்குகள், பழவேற்காடு ஊராட்சியில் துப்புரவு பணிக்கு என்று 3 மின்சார பேட்டரி ஆட்டோக்கள், பசியாவரம் மேம்பாலம் கட்டும் பணி துவக்கம், பழவேற்காடு அரசு மேல்நிலை பள்ளிக்குச் சுற்றுச்சுவர், பழவேற்காடு ஊராட்சி உள்ள நான்கு குளங்களுக்கு படித்துறை, குடிசை மாற்று வாரியத்தின் மூலம் ரூபாய் 2.10 லட்சம் மதிப்பிலான தொகுப்பு வீடுகள் 68 பயனாளிகளுக்கு வழங்க அரசாணை ஏற்பாடு செய்தது, 210 குடும்பங்களுக்கு பட்டா வழங்க முதல் கட்ட ஏற்பாடு செய்தது, நீலப்புரட்சி திட்டத்தின் கீழ் பயணளிகளுக்கு தொகுப்பு வீடுகள், ஊராட்சி முழுதும் 88 கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது, 90 பயனாளிகளுக்கு வேலை உறுதியளிப்பு அட்டை, பழவேற்காடு அரசு மருத்துவமனை 24 மணி நேர மருத்துவமனையாக மாற்றப்பட்டது. பழவேற்காடு பகுதி இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கியது. உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் விளக்கினார்.

செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *