கோயம்பத்தூரில், மாணவியை ஏமாற்றி பலாத்காரம் செய்த, காதலன், கார் டிரைவர் போக்ஸோ சட்டத்தில் கைது…
1 min read
கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்த ஒரு மாணவி. இவர் வீட்டிற்க்கு அருகில் உள்ள பள்ளியில் 11 – ம் வகுப்பு படித்து வந்துள்ளார். மாணவிக்கு பேஸ்புக் மூலம் கடலூரை சேர்ந்த ஏழுமலை(27) என்பவர் பழக்கம் ஆகி உள்ளார். ஏழுமலையும் 11ம் வகுப்பு மாணவியும் செல்போனில் தினமும் அடிக்கடி பேசிப் பழகி வந்துள்ளனர். நாளடைவில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. ஒரு கட்டத்தில் மாணவி, தனது முகநூல் காதலன் ஏழுமலையை சந்திக்க விரும்பி இருக்கிறார். இருவரும் செல்போனில் பேசி திருச்சியில் இருவரும் சந்திக்க முடிவு செய்தனர்.

அதன்படி, தன் முகநூல் காதலனை திருச்சி சென்று சந்திக்க விரும்பிய மாணவி தனக்கு ஏற்கெனவே பழக்கமான கால் டாக்ஸி டிரைவர் சண்முகத்திடம் உதவி கேட்டிருக்கிறார். இதை வைத்து மாணவியை அடைய விரும்பிய சண்முகம் , மாணவியை மிரட்டி ஊட்டிக்கு அழைத்து சென்று ஹோட்டலில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். மூன்று நாட்கள் கழித்து மாணவியை திருச்சிக்கு அழைத்து சென்று ஏழுமலையிடம் ஒப்படைத்திருக்கிறார்.

ஆனால், திருச்சியில் அறை எடுத்த ஏழுமலை மாணவியை 3 நாட்கள் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர், வேளாங்கண்ணிக்கு அழைத்து சென்று அங்கு தங்கியுள்ளார். இந்த சூழலில் மாணவியின் பெற்றோர் தங்கள் மகள் காணாமல் போனது குறித்து கோவை செல்வபுரம் போலீசில் புகார் அளித்திருந்தார்கள்.

கோவை செல்வபுரம் போலீசார் மாணவியின் செல்போன் டவரை வைத்து வேளாங்கண்ணியில் இருப்பதை கண்டுபிடித்தனர். உடனடியாக , வேளாங்கண்ணி போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டு, ஏழுமலையிடமிருந்து மாணவியை போலீசார் மீட்டனர். வழக்கு பதிவு செய்த போலீசார், கால் டாக்ஸி ஒட்டுநர் சண்முகம், ஏழுமலை ஆகியோர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நிழல்.இன் – 8939476777