செங்குன்றம், ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வெறித் தாக்குதல் நாடகம், வக்கீல் உள்பட 6 பேர் சிறையில் அடைப்பு…
1 min read
திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அருகே உள்ள பாடியநல்லூர் பகுதியில் வசித்து வருபவர் கண்ணன் (வயது46) இவர் பெரியபாளையம் அருகே திருநிலை கிராமத்திற்கு ரியல் எஸ்டேட் தொழில் சம்பந்தமாக கடந்த 27-ம் தேதி காரில் சென்றதாகவும், மாலை வீடு திரும்பும் போது தனது காரை டிரைவர் மணி ஓட்டினார் இந்நிலையில், பெரியபாளையம் – சென்னை நெடுஞ்சாலையில் கன்னிகைபேர் ஏரிக்கரை வளைவு அருகே உள்ள வேகத்தடையில் கார் சென்ற போது இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நாலு பேர் கொண்ட மர்ம நபர்கள் திடீரென காரை வழிமறித்து நிறுத்தி தன்னையும், தன்னுடன் வந்தவர்களையும் கண்ணிமைக்கும் நேரத்தில் பட்டாக்கத்தியால்
கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டனர்.

உடனே காரில் வந்த தானும், டிரைவர் மணி ஆகியோர் காரிலிருந்து இறங்கி தப்பி ஓடினோம் எங்களை மர்ம நபர்கள் சுமார் அரை கிலோமீட்டர் தூரம் விரட்டினர். அப்போது வழியில் இருந்த ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி விட்டு சுமார் 50 பேர் வெளியே வந்தனர். அவர்கள் எங்களை விரட்டி வந்த நபர்களை பிடிக்க முயலவே அவர்கள் எங்களை தாக்காமல் ஓடிவிட்டனர் என, இச்சம்பவம் குறித்து கண்ணன் பெரியபாளையம் காவல் நிலையத்தில் சில தினங்களுக்கும் புகார் செய்து இருந்தார்.

ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி உத்தரவின் பேரில், பெரியபாளையம் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன் குற்றவாளிகளை தேடி வந்தனர், மேலும், குற்றவாளிகள் வந்த மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை கொண்டு போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கி விட்டனர். இந்நிலையில், சென்னையைச் சேர்ந்தவர்களான பட்டாளம் பகுதியில் வசித்து வரும் வக்கீல் ராஜா(வயது39) என்பவரது ஏற்பாட்டில் இந்த கொலைவெறி தாக்குதல் நாடகம் நடத்தியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

கண்ணன் பி.எஸ்.ஓ பாதுகாப்பு தனக்கு தேவை அதற்கு என்ன? செய்யலாம், என்று வக்கீல் ராஜா வை அணுகியபோது அவர் கொடுத்த ஆலோசனையின்படி இந்த நாடகம் நிறைவேற்றப்பட்டதாக தெரியவந்தது. எனவே, போலீசார் வக்கீல் ராஜா மற்றும் இந்த நாடகத்தின் கூட்டாளிகளான மாதவரம் விவேக் என்ற லியோ விவேக்(வயது30), அயனாவரம் பாலாஜி(வயது30), ஐசிஎப் டாக்டர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த யுவராஜ்(வயது40),கொளத்தூர் ஹரிஹரன்(வயது27),கொளத்தூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சக்திவேல்(வயது23) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர்.

குற்றவாளிகள் 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து ஊத்துக்கோட்டை முதல்நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர் செய்தனர்.பின்னர், காஞ்சிபுரம் கிளை சிறையில் அடைத்தனர். திமுக பிரமுகரின் கொலைவெறி தாக்குதல் நாடகம் அம்பலம் ஆனதால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

செய்தியாளர் – சீனிவாசன்
நிழல்.இன் – 8939476777