April 22, 2021

சென்னையில்,
தமிழக அரசை எச்சரிக்கும் விதமாக,
மிகப்பெரிய போராட்டம், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி எச்சரிக்கை…

1 min read

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, திருவண்ணாமலை மாவட்ட கிளையின் சார்பாக, நூற்றுக்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சி.பி.எஸ் திட்டம் ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய நடைமுறைப்படுத்தப்பட வேண்டும், இடைநிலை ஆசிரியர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் மீண்டும் வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது.

ஆசிரியர்களின் தொடர் போராட்டங்களுக்கு அரசாங்கம் செவி சாய்க்காத பட்சத்திலும், உங்களின் கோரிக்கைக்கு ஏற்ப அரசு அறிவிப்பை வெளியிடாத பட்சத்திலும், அடுத்த கட்ட போராட்டமாக வருகின்ற நாட்களில் 10 ஆயிரம் ஆசிரியர்களை சென்னையில் திரட்டி தமிழக அரசை எச்சரிக்கும் விதமாக மிகப்பெரிய போராட்டம் நடத்த இருப்பதாக மாவட்ட தலைவர் முருகன் செய்தியாளர்களை சந்திக்க கையில் தெரிவித்தார்.

மாநில துணைத்தலைவர் அலோசியஸ் துரைராஜ் தர்ணா போராட்டம் நிறைவுரை நிகழ்த்தினார். இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர்கள் ஜெயலட்சுமி, பாக்கியநாதன், முத்துகிருஷ்ணன், மாவட்ட துணைச் செயலாளர்கள் மேரி அமளி ரசாலி, முத்து, சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட பொருளாளர் வெங்கடபதி வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்ட செயலாளர் அந்தோணி ராஜ் துவக்க உரை நிகழ்த்தினார். மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் மோகன், கரீம், ராமச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் விளக்க உரை நிகழ்த்தினர். திருவண்ணாமலை வட்டார செயலாளர் புகழேந்தி இறுதியாக நன்றியுரை ஆற்றினார்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *