April 22, 2021

திருவள்ளுரில், “ஸ்டாலின் தான் வாராரு, விடியல் தான் தர போறாரு” எனும் முழக்கம்…

1 min read

ஸ்டாலின் தான் வாராரு,
விடியல் தான் தர போறாரு” எனும் முழக்கத்துடன், திமுகவின் திருவள்ளூர் மேற்கு மாவட்டம், கடம்பத்தூர் மேற்கு ஒன்றியம் சார்பில், “அதிமுகவை நிராகரிக்கிறோம் ” என்கிற தலைப்பில், முதுகூர் ஊராட்சியில் “மக்கள் கிராம சபை” கூட்டம் ஓன்றிய செயலாளர் மோ.ரமேஷ் தலைமையில் நடைபெற்றது.

திருவள்ளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடத்தில் குறைகளை கேட்டறிந்து சிறப்புரையாற்றினர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் க.திராவிட பக்தன் , ஓன்றிய குழு துணை தலைவர் சரஸ்வதி ரமேஷ் , மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் தி.ஆ.கமலக்கண்ணன்,

ஓன்றிய நிர்வாகிகள் காமராஜ், ஆர்.கோபால், கீதா முனுசாமி, ஓன்றிய குழு உறுப்பினர்கள் கார்த்திகேயன், சக்திதாசன் , இளைஞர் அணி ராஜா,சதாசிவம், ராஜேந்திரன் , பாஸ்கரன் ,எல்.ஐ.சி பாஸ்கர், வயலூர் ஜீவா , யோகலட்சுமி, ஜே.சி.பி.கேசவன் , மற்றும் மாணவரணி நிர்வாகிகள், கழகத் தோழர்கள் மற்றும் முதுகூர் ஊராட்சியை சேர்ந்த பெண்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – மகேஷ்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *