சென்னையில், “அரசியலுக்கு வாங்க…” என, ரஜினி ரசிகர்கள் அறவழி போராட்டம்,
1 min read
ரஜினிகாந்த், 1996ல் இருந்து அரசியலில் வரவேண்டும் என ரசிகர்கள் எதிபார்த்தார்கள் என, பரவலாக பேசப்படுவது வழக்கம். ஆனால் அவரை அரசியலுக்கு இழுக்கும் முயற்சி அதற்க்கு முன்பே, 1987ல் எம்.ஜி.ஆர் மறைவிற்க்கு பின் இன்று அவர் ரசிகர்கள் அறவழி போராட்டம் நடத்தும் இதே வள்ளுவர் கோட்டத்தில் இருந்து தான் துவங்கியது என்பது தான் உண்மை.

ஆமாம், அன்று ஜானகியம்மாள் முதல்வராக இருந்த போது, ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் தயாரித்து வெளிவந்த ஊர்காவலன் திரைப்பட வெற்றி விழாவில் இருந்தே, ரஜினியை அரசியலுக்கு இழுக்கும் முயற்சிகள் நடந்தது என்பது தான் உண்மை, ஆனால் அன்றையில் இருந்து ரஜினியின் அரசியல் வருகைக்காக காத்து கிடந்த அனைத்து தரப்பும் ஏமாற்றம் அடையும் வகையில், ” நான் அரசியலுக்கு வரவில்லை என்னை மன்னியுங்கள்” என அவர் வெளியிட்ட அறிக்கை, அமைந்துவிட்டது. காரணம், கொரோனா பரவலால் அவர் தானும் பாதித்து, அதனால் தன்னை நம்பி இருக்கும் ரசிகர்களும் பாதிக்கப்பட்டுவிட கூடது என்ற நோக்கத்தில், அப்படி அறிவிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது.

ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்கள் சிலர் ரஜினியின் இந்த முடிவை வரவேற்றுள்ள நிலையில், மக்கள் மன்றத்தில் கீழ்மட்ட பொறுப்பில் இருப்பவர்களும், ரசிகர்களும் ரஜினிகாந்த் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகிறார்கள். இதையடுத்து ரஜினி ரசிகர்கள், தங்களது பலத்தை காட்டும் வகையில் ஓரிடத்தில் கூடி ரஜினியை அரசியலுக்கு இழுப்பதற்காக முடிவு செய்தனர். சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஜன.10-ந்தேதி (இன்று) அனைத்து ரசிகர்களும் ஒன்று திரண்டு ரஜினியை அரசியலுக்கு அழைப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது.

இதற்கு ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களும், மாநில தலைமையும் எதிர்ப்பு தெரிவித்தது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கைகளில், ரஜினியை அரசியலுக்கு வர வலியுறுத்தி யாரும் போராட்டம் போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால், ரஜினி ரசிகர்கள் அதனை பொருட்படுத்தாமல் திட்டமிட்டபடி ஜன.10-ந்தேதி (இன்று) நுங்கம்பாக்கத்தில் ஒன்றுகூடுவதற்கு முடிவு செய்தனர். மேலும் இந்த அறவழி ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. அதன்படி, இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து வந்த ரஜினி ரசிகர்கள் அறவழி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என முழக்கங்கள் எழுப்பி வருகின்றனர்.
நிழல்.இன் – 8939476777