April 22, 2021

தமிழ்நாடு காவல் துறையின் மூலம், கிராம கண்காணிப்பு அலுவலர் நியமனம், மக்கள் மகிழ்ச்சி…

1 min read

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரட்சனைகளை அடியோடு ஒழிக்க வேண்டி, தமிழ்நாடு காவல் துறையின் மூலம், ஒவ்வொரு கிராமத்தையும் கண்காணிக்க ஒரு காவலர் நியமனம் செய்யபட்டு உள்ளனர். அதன்படி, தற்போது மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களும் அதன் எல்லைகளுக்கு உட்பட்ட, ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒரு போலிசார் நியமிக்கபட்டு அந்த போலிஸ்காரர் அந்த ஊரில் உள்ள அனைத்து மக்களிடமும் நேரடி தொடர்பில் இருக்கும்படியும், அந்த ஊரில் உள்ள மக்கள் தங்களுக்கு எந்த பிரட்சனை என்றாலும், அந்த போலிஸ்காரரை உடனடியாக, தொடர்பு கொண்டு உதவியினை பெறலாம் என, அறிவுறுதபட்டு உள்ளனர்.

இந்த புதிய திட்டத்தை திருவள்ளுர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், பொன்னேரி துணை கண்காணிப்பாளர் கல்பனா தத் அவர்கள் மேற்பார்வையில், மீஞ்சூர் காவல் நிலையத்தின் எல்லைக்கு உட்பட்ட கிராமங்களிலேயே முதன் முதலாக அனுப்பம்பட்டு ஊராட்சியில் அந்த புதிய திட்டதை இன்ஸ்பெக்டர் மதியரசன் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியை, ஊராட்சிமன்ற தலைவர் கிருஷ்ணவேணி மற்றும் அனுப்பம்பட்டு கூட்டுறவு சங்க தலைவர் உமாமகேஸ்வரன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்ச்சி, முன்னாள் ஊராட்சிமன்ற துணைதலைவர் தலைவர் ஏ.கே.மோகன் தலைமையில் நடந்தது. அதில், இன்ஸ்பெக்டர் மதியரசன், சப் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
இன்ஸ்பெக்டர் மதியரன் மக்களிடையே பேசுகையில், உங்கள் கிராமத்திற்காக கதிரவன் என்ற இந்த போலிஸ்காரர் நியமிக்கபட்டு உள்ளார். என கூறி, அவரை மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். இவர் உங்கள் கிராமத்தை முழுமையாக தொடர்ந்து கண்காணிப்பார். நீங்கள் அவசர காலங்களில் எங்களை தொடர்பு கொள்ள ஏதுவாக போலிஸ் அதிகாரிகளின் போன் எண்கள் அனைத்தும், நாளை உங்கள் ஊரில் பல இடங்களில், போர்டுகள் மூலம் விளம்பரபடுத்தப்படும். எனவும்,

பெற்றோர்கள் உங்கள் பிள்ளைகளை இளம் வயதில் தீவிரமாக கண்காணித்து நட்புடன் பழக வேண்டும் எனவும், பெண்கள் உங்கள் அவசரகால உதவிக்கு எங்களை தொடர்பு கொள்ளலாம். உங்கள் ஊரில் சட்டம் ஒழுங்கு பிரட்சனைகள் எதும் நடந்தாலும் முதலில் கதிரவன் போலிஸ்காரரை தொடர்பு கொண்டால், அவர் உடனடியாக இங்கு நேரில் வந்து உங்களுக்கு உதவுவார். உங்களுடைய தகவல்கள் வெளியில் தெரியாத அளவிற்க்கு, போலிஸ் ரகசியமாக வைத்து கொள்ளும். ஆகவே எந்தவிதமான அச்சமும் இல்லாமல் எங்களை தொடர்பு கொள்ளலாம், என விழிப்புணர்வு கருத்துகளையும், அறிவுரைகளையும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், அனுப்பம்பட்டு வார்டு உறுப்பினர்கள் முனுசாமி, வினோதினி, அம்சவள்ளி, செங்காளா மற்றும் கூட்டுறவு சங்க இயக்குனர் ராமனாதன், சமூக ஆர்வலர் சசிபாபு, கார்த்திக், வினோத், பாபு, ரவி, ஆனஸ்ட், அய்யப்பன், செல்வம், அங்குசாமி, ஆகாஷ், ரவிசந்திரன்,சந்துரு, விமல், சசிகுமார் உட்பட பெண்கள், இளைஞர்கள் என பலர் திரளாக கலந்து கொண்டனர். இறுதியாக உடற்கல்வி ஆசிரியர் வேல்முருகன் நன்றி கூறினார்.

செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *