இந்த ஆண்டு, எல்லோருக்கும் “மாஸ்டர் பொங்கல்” தான்…
1 min read
தளபதி விஜய், லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் தயாராகி உள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இளம் இசையமைப்பாளர் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து உள்ளார். மாளவிகா மோஹனன், சாந்தனு, ரம்யா, கௌரி கிஷான், ஸ்ரீமன், சஞ்சீவ், நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

எக்ஸ்.பி பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர். இந்த படத்தை சவன் ஸ்கிரீன் (Seven Screen) ஸ்டுடியோவும் இணைந்து தயாரித்துள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போய் கொண்டு உள்ள நிலையில், இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் செம ஹிட்டாகி உள்ளது.

தீபாவளியை முன்னிட்டு இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஜனவரி 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தின் சென்சார் வேலைகள் நிறைவடைந்து , படத்திற்கு யூ/ஏ சர்டிபிகேட் கிடைத்துள்ளது. ரிலீஸ் தேதி நெருங்கி வரும் நிலையில் இந்த படத்தின் புதிய ப்ரோமோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அந்த கண்ண பார்த்தாக்கா பாடலோடு ஒரு ரொமான்டிக் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது, இந்த ப்ரோமோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

செய்திகள் – லெனின் லோகேஷ்
நிழல்.இன் – 8939476777