திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் பகுதிகளில், ஜல்லிகட்டு நடத்த, மாவட்ட ஆட்சியரிடம், எம்.எல்.ஏ அனுமதி கேட்டு மனு…
1 min read
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி கோரி, மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த ஆதமங்கலம், புதூர், கடலாடி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில், பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு ஒவ்வொரு ஆண்டும் நடத்துவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் ஜல்லிகட்டு நடத்துவதற்கு அனுமதி கோரி, கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் தலைமையில், கிராம பிரமுகர்கள் இன்று, மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை உழவர்களுக்கு மட்டுமல்ல, விவசாயிகளின் விளைபொருட்களை விற்பனை செய்யும் சாலையோர வியாபாரிகளுக்குமானது தான், என்று கூறி தங்களது சாலையோர கடை அருகில் பொங்கல் பானை மற்றும் கரும்பு இவற்றை வரைந்து தமிழர் திருநாளை கொண்டாடும் சாலையோர பழம் மற்றும் காய்கறி வியாபாரிகளான சுமதி மற்றும் பச்சையம்மாள்.
செய்தியாளர் – மூர்த்தி
நிழல்.இன் – 8939476777