திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு ஏரியில், மீன்பிடிக்கச் சென்ற மீனவர் வலையில் சிக்கி இறந்ததால், கிராம மக்கள் சோகம்…
1 min read
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகே அவுரிவாக்கம் கீழ்குப்பம் கிராமத்தில் வசிப்பவர் சிகாமணி (54) இன்று பழவேற்காடு ஏரியில் மீன் பிடிப்பதற்காக சீராளன், ராஜேஷ் ஆகியோருடன் சேர்ந்து ஏரியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி வலையில் சிக்கி மாட்டிக் கொண்டார். உடனிருந்த மீனவர்கள் அவரை வலையிலிருந்து மீட்பதற்குள் உயிரிழந்து விட்டார்.

இதுகுறித்து, திருப்பாலைவனம் காவல்துறையினருக்கும், வருவாய் மற்றும் மீன்வளத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் திருப்பாலைவனம் காவல்துறையினர், வருவாய் மற்றும் மீன்வளத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் | அவுரிவாக்கம் ஊராட்சியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல்.இன் – 8939476777