“ராயபுரம் தொகுதியில், ஸ்டாலின் என்னை எதிர்த்து போட்டியிட தயாரா” ஜெயக்குமார் கேள்வி…
1 min read
சென்னை ராயபுரத்தில், திமுக சார்பில் நடந்த வார்டு சபை கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், “ஜெயக்குமார் இந்த ராயபுரம் தொகுதிக்கு ஏதும் செய்யவில்லை” என குற்றம்சாட்டி இருந்தார்.

அதற்க்கு பதில் சொல்லும் விதமாக, சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஜெயக்குமார் சென்னை – ராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் தம்மை எதிர்த்து போட்டியிட தயாரா ? என திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு, மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார்,இராயபுரம் தொகுதியில் மு.க.ஸ்டாலினை நேருக்குநேர் எதிர்த்துப் போட்டியிட தாம் தயார் என்றார். முன்னதாக பொங்கல் விழாவில் அமைச்சர், மேடையில் பாட்டு பாடினார். விழாவில் பாட்டு பாடியவர்களில் சிறந்த 5 பேரை தேர்ந்தெடுத்து, ஒவ்வொருவருக்கும் தலா ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கி, அமைச்சர் ஜெயக்குமார் பாராட்டு தெரிவித்தார்.

நிழல்.இன் – 8939476777