January 28, 2021

ரேஷன் கடை ஊழியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து, ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம்

1 min read

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தமிழ் நாடு அரசு நியாய விலைகடை பணியாளர் சங்கத்தின் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்பாட்டதிற்க்கு, மாவட்ட தலைவர் எ.சி. சேகர் தலைமை தாங்கினார். தானிப்பாடி தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்தில் டி.வேலூர்
கடையில் பணிபுரியும் சுரேஷ் பொங்கல் பரிசு வழங்கும் போது அதே பகுதியை சேர்ந்த
கார்த்திகேயன் ஒன்றிய கவுன்சிலர் தகாத வார்த்தையால் திட்டி கொலை வெறி
தாக்குதல் நடத்தியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் ஒன்றிய கவுன்சிலர் பதவியை பறிக்க வேண்டும், நியாய விலை கடை பணியாளர்க்கு உரிய பணி பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும், என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *