அரந்தாங்கியில், ஸ்ரீ விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு, வெள்ளி கவசம் அணிவித்து, விசேஷ பூஜைகள் நடைபெற்றன…
1 min read
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அடுத்த அழியாநிலை பகுதியில் அமைந்துள்ள, ஸ்ரீ விஸ்வரூப ஆஞ்சநேயர் திருக்கோவில் அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு சிறப்பு தீபாராதனைகள் அபிஷேகங்கள் நடைபெற்றன. அழியாநிலை பகுதியில் அமைந்துள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஆகும்.

இத்திருக்கோவிலில் நாமக்கலில் இருப்பது போன்று இங்கு உள்ள ஸ்ரீ விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலையும் வடிவ
அமைக்கப்பட்டதாகும்.
இக் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி சனிக்கிழமைகள் மற்றும் அனுமன் ஜெயந்தி விழா வெகுசிறப்பாக கொண்டாடப்படும்.
அதே போல், இந்த ஆண்டிற்கான அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே யாகசாலை தொடங்கி நூற்றி எட்டு மூலிகைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் வெள்ளி கவசம் அணிவித்து சிறப்பு தீபாராதனைகளுடன் பெரும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இந்த அனுமன் ஜெயந்தி விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ராமபக்த சேவா சங்க சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அறந்தாங்கி காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயசீலன் தலைமையிலான அறந்தாங்கி நகர காவல் துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

செய்திகள் – ஆனந்த்
நிழல்.இன் – 8939476777