தெலங்கானா மாநில நீர் நிலைகளை, தேசிய நீர்வழி சாலை திட்ட குழுவினர் ஆய்வு…
1 min read
நவீன நீர்வழிச்சாலை திட்டம்,தேசிய ஒருங்கிணைப்பாளரும், தமிழக நீர்மேலாண்மை உயர்மட்ட திட்ட ஆலோசகருமான, தனுவேல்ராஜ் முத்துக்காத்தன் அவர்கள் தலைமையில், ஆய்வு குழுவினர், தேசிய நவீன நீர்வழிச்சாலையின் முக்கிய பகுதியான தெலங்கானா நவீன நீர்வழிச்சாலை தொடர்பாக தெலங்கானா மாநிலத்தில் உள்ள கீழ் மனையார் அணை(Lower Manaiar Dam), எல்லம்பள்ளி அணை(கோதாவரி ஆற்றுக்கு குறுக்கே கட்டப்பட்டது), மற்றும் காலேஸ்வரம் சுரங்க நீரேற்று நிலையம் (உலகின் மிக பிரம்மாண்டமான அதாவது 500மீட்டருக்கு மேல் நீரேற்றும் திட்டம்) போன்றவற்றை நேரில் பார்த்து ஆய்வுகள் மேற்கொண்டனர்.

இந்த திட்டங்களை நேரில் பார்த்து ஆய்வு செய்ய வேண்டும் என ஆய்வு குழுவினர் அனுமதி கேட்ட உடன் உடனே, அவர்களுக்கு அனைத்து விதமான அனுமதியும் அரசு சார்பில் பெற்று தந்ததோடு நிற்காமல், நேரடியாக சம்பந்தப்பட்ட தெலங்கானா மாநில பொதுப்பணித்துறை உயரதிகாரிகள் அனைவரையும், தெலங்கானா மாநிலத்தின் நீர்வளத்துறை தலைவரான பிரகாஷ் ராவ் அவர்கள் கைபேசியில் அழைத்து ஆய்வு குழுவினர்களுடன், பயணிக்க வைத்து திட்டங்கள் ஒவ்வொன்றையும் முழுவதும் ஆய்வு குழுவிற்கு விளக்கிட ஏற்பாடு செய்து கொடுத்தார்.

அவர்களோடு ஆய்வு குழுவினர்களுடன் முழுவதும் பயணித்த பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும் மற்றும் சிறப்பு அனுமதியளித்த மாண்புமிகு தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் அவர்களுக்கும் ஆய்வு குழுவினர் நன்றிகளை தெரிவித்து கொண்டனர். ஆய்வு குழுவினர்களுடன் முழுவதும் தெலுங்கானா மாநில நவீன நீர்வழிச்சாலை ஒருங்கிணைப்பாளருமான வெங்கட் அவர்கள் உடன் இருந்தார்.

நிழல்.இன் – 8939476777