April 20, 2021

அறந்தாங்கியில் தொடர் மழையின் காரணமாக, வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்…

1 min read

புதுகோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகர் பகுதிகளில், கடந்த சில தினங்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் தண்ணீரை வெளியேற்ற கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அறந்தாங்கி நகர் பகுதியில் உள்ள மணிவிழா தெரு 7, 8, 9 உள்ளிட்ட பகுதிகளில் இந்த தொடர் மழையின் காரணமாக மழைநீர் வெளியேற முடியாததால், தேங்கி நின்று வீடுகளுக்குள் புகுந்தது. இதனை முறையாக வடிகால் வெட்டி தேங்கிய தண்ணீரை வெளியேற்ற கோரி, அப்பகுதி மக்கள் பலமுறை புகார் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை என கூறி அறந்தாங்கி ஆவுடையார்கோவில் முக்கிய சாலை பகுதியான அக்னி பஜார் என்னும் இடத்தில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால், போக்குவரத்து பாதிப்பு அடைந்த அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. பின்னர் தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், நகராட்சி நிர்வாகத்தினர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மழைநீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்து, உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில், சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு, அதிகாரிகளை பாதித்த தங்கள் பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.

அதிகாரிகள் நேரில் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடி நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

செய்திகள் – ஆனந்த்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *