January 25, 2021

ஆலங்குடி சுற்றுவட்டாரத்தில், மழையால் பாதித்த பயிர்களை, நேரில் பார்வையிட மறுப்பதாக, வேளாண் அதிகாரிகள் மீது, திமுக எம்.எல்.ஏ மெய்யநாதன் குற்றச்சாட்டு…

1 min read

அறந்தாங்கி தாலுகாவிற்க்கு உட்பட்ட அரசர்குளம், ஆயிங்குடி, வல்லவாரி, மேற்ப்பனைக்காடு, மன்னகுடி, பிடாரிகாடு, மங்களநாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக, அறுவடைக்குத் தயாரான நெற்ப்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமாகியுள்ளது. இதனால், விவசாயிகள் செய்வதறியாது கவலையில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில், மழையால் பாதிப்படைந்த பயிர் நிலங்களை ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினர் நேரில் பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்.

அப்போது பேசிய அவர், புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் தொடர் மழை காரணமாக பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நீரில் மூழ்கி அழுகிவிட்டது, கடன்களை வாங்கி விவசாயம் செய்திருந்த விவசாயிகள் கண்ணீரில் ஆழ்ந்துள்ளனர், என்று கூறினார். மழையால் பாதிக்கப்பட்ட தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு நிவாரணம் அறிவித்த முதல்வர் புதுக்கோட்டை மாவட்டத்திற்க்கு நிவாரணம் அறிவிக்கக் கேட்டுக் கொண்டார். மேலும், பாதிக்கப்பட்ட இடங்களை சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் வேளாண்துறை அதிகாரிகளை நேரில் பார்வையிடக் கோரினால், நேரில் வர மறுத்து, மனுவாக எழுதித் தருமாறு அதிகாரிகள் கூறுவதாக குற்றம் சாட்டினார்.

அரசு அறிவித்துள்ள ஏக்கருக்கு 8 ஆயிரம் போதாது, போர்க்கால அடிப்படையில் ஏக்கருக்கு 45 ஆயிரம் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். அப்படி அரசு வழங்கத் தவறும் பட்சத்தில் விவசாயிகளை ஒன்று திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தான் அடித்தக் கொள்ளையை ,தேர்தலை முன்னிட்டு பொங்கல் பரிசாக மக்களுக்கு வழங்கி வருகிறார். இதனை செய்தி வெளியிட்ட நிருபர்களை மிரட்டும் தோனியில் நடந்து கொண்ட அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொண்டார். நிகழ்வில் ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், மாவட்டக்குழு உறுப்பினர் சரிதாமேகராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் உடனிருந்தனர்.

செய்திகள் – ஆனந்த்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *