சோழவரம் ஆத்தூர் ஊராட்சி சமத்துவ பொங்கல் நிகழ்சியில், டி.எஸ்.பி கல்பனா தத் கலந்து கொண்டு பொங்கல் வைத்து கொண்டாடினார்…
1 min read
சோழவரம் ஒன்றியம், ஆத்தூர் ஊராட்சியில் தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஊராட்சி மன்ற தலைவர் சற்குணன் தலைமையில், சமத்துவ பொங்கல் விழா நடத்தப்பட்டது. ஆத்தூர் ஊராட்சிமன்றம் சார்பாக நடந்த இந்நிகழ்சியில், அனைத்து மக்களும் ஒன்றிணைந்து, கிராம தேவதை அருள் மிகு கைகாத்தம்மன் கோவில் வளாகத்தில் சமத்துவ பொங்கல் வைத்து சிறப்பாக கொண்டாடினர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக, பொன்னேரி துணை காவல் கண்காணிப்பாளர் கல்பனா தத் அவர்கள் மற்றும் சோழவரம் காவல் ஆய்வாளர் நாகலிங்கம் அவர்கள் கலந்து கொண்டு மக்களோடு, மக்களாக மகிழ்ச்சி பொங்க சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினர். மேலும், பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சியோடு, மக்களுக்கு காவல்துறை சார்பாக, டி.எஸ்.பி மற்றும் இன்ஸ்பெக்டர் ஆகியோர் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு கருத்துகளையும், அறிவுரைகளையும் வழங்கினார்கள்.

இந் நிகழ்சியில், முத்துநாயுடு மற்றும் ஆத்தூர் ஊராட்சிமன்ற துணை தலைவர் லதாசீனிவாசன் வார்டு உறுப்பினர்கள் தேன்மொழி, சர்மிளா, நதியா, கலா, மனிஷா, ராதிகா, சீனிவாசன், பிரபு மற்றும் ஊராட்சி செயலாளர் சேதுபதி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை, ஆத்தூர் ஊராட்சிமன்ற தலைவர் சற்குணன் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.
செய்தியாளர் – பூர்ணவிஷ்வா
நிழல்.இன் – 8939476777