April 22, 2021

திருவண்ணாமலையில், கட்டுமான தொழிலாளர்களுக்கு பாதுகாப்பின்றி, பொங்கல் பரிசுகள் வழங்கபட்டது…

1 min read

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதிய தொழிலாளர்களுக்கு அனைவருக்கும் அரசு வழங்க கூடிய பொங்கல் பரிசுகள் அதிகாரிகளால் வழங்கபட்டது. அப்போது அதிகாரிகள் மற்றும் பயனாளிகள் யாரும் முககவசம் அணியாமலும், போதிய சமூக இடைவெளி இல்லாமலும் முண்டியடித்து கொண்டு கூட்டம், கூட்டமாக வந்து பொருடகளை பெற்று சென்றனர். அதிகாரிகள் அரசு கூறும் வழிமுறைகளை கடைப்பிடிக்காமல் மக்களுக்கு பொங்கல் பொருட்களை வழங்கினர்.

திருவண்ணமலை
பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகளை சீரமைக்க பயணிகள் கோரிக்கை…

திருவண்ணாமலையில் மத்திய பேருந்து நிலையத்தில், பயணிகள் அமரும் இடத்தில் மின் விளக்குகள் பாதிக்கு மேல் எரியாமல் உள்ளது. அதனால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு பல்வேறு ஊர்களில் இருந்து வந்து செல்லும் பயணிகள் மிகவும் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். எனவே, உடனடியாக மின் விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை சீரமைக்க வேண்டும், என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவண்ணாமலை ஆஞ்சநேயர் ஜெயந்தி முன்னிட்டு, கிரிவலப்பாதையில் உள்ள ஆஞ்சநேயர் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் ஆராதனை நடைபெற்றது. பெரும்பான்மையான பக்தர்கள் ஆஞ்சநேயரை தரிசித்து அருளாசி பெற்றனர்.

செய்திகள் – மூர்த்தி
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *