திருவண்ணாமலை, சோகில்நசிபட்டு ஊராட்சியில், சமத்துவ பொங்கல் விமர்சியாக, கொண்டாடபட்டது…
1 min read
மாவட்டம், திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சோகில்நசிபட்டு ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவர் அர்ஜுனன் தலைமையில் வெகு சிறப்பாக, சமத்துவ பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில், ஊராட்சி பணியாளர்களுக்கு தலைவர் புத்தாடைகள் வழங்கினார். மேலும் இந்நிகழ்சியில், வார்டு உறுப்பினர்கள் மற்றும் திரளான கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

திருவண்ணாமலை அடுத்த அடி அண்ணாமலையில், போட்டோ ஸ்டுடியோ நடத்தி வருபவர் லோகநாதன் தனது கடைக்கு விளம்பர பலகை மாட்டும் போது, எதிர்பாரா விதமாக மின்சாரம் தாக்கியது. உடனே அங்கிருந்தவர்கள் அவரை அடிஅண்ணாமலை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, திருவண்ணாமலை அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல்.இன் – 8939476777