அறந்தாங்கியில், தேமுதிகவினர் சார்பில், பொதுமக்களுக்கு இலவச பொங்கல் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கினர்…
1 min read
புதுகோட்டை தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில், அறந்தாங்கி நகர தேமுதிகவினர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தெற்கு மாவட்ட செயலாளர் ராமசாமி தலைமையில் அறந்தாங்கி நகர செயலாளர் மணிகாந்த், தொகுதி பொறுப்பாளர் காந்தி,
நகரபொருளாளர் ஆனந்த்,
நகர அவைத்தலைவர் நைனாமுகம்மது
தெற்கு மாவட்ட அவைத்தலைவர் மன்மதன் ஆகியோர் முன்னிலையில் அறந்தாங்கி நகர தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் சுமார் 100க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில், மணமேல்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன், ஆவுடையார்கோவில் ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், அறந்தாங்கி தெற்கு ஒன்றியசெயலாளர் கலைஞர், அறந்தாங்கி வடக்கு ஒன்றிய செயலாளர் சசிகுமார் மற்றும் தேமுதிக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

செய்திகள் – ஆனந்த்
நிழல்.இன் – 8939476777