அறந்தாங்கி நகர காவல் துறையினர் சார்பில், சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது…
1 min read
புதுகோட்டைமாவட்டம் அறந்தாங்கி நகர காவல் நிலையம் சார்பில், காவல்துறையினர் சமத்துவ பொங்கல் விழாவினை காவல் நிலையத்தில் சிறப்பாக கொண்டாடினார்.

அறந்தாங்கி நகர காவல் நிலையத்தில் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழாவிற்கான ஏற்பாடுகளை அறந்தாங்கி நகர காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயசீலன் அவர்கள் தலைமையில், நகர காவல் ஆய்வாளர் ரவீந்திரன், உதவி காவல் ஆய்வாளர்கள்
சிவக்குமார், சாமிகண்ணு, ரேஷ்மா, முன்னிலையில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர்கள் பழனிவேலு, சுப்பிரமணியன், தலைமை காவலர்கள் முருகன், அமுதா, முருகேசன், தங்கராணி, லட்சுமி, காவல் தனிப்பிரிவு பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட அறந்தாங்கி நகர காவல் நிலைய காவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த சமத்துவ பொங்கல் விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக சமூகஆர்வலர்கள் கிரீன்முகமது, தமிழ்நாடு பகதூர்ஷா, ஹாரிஸ், குவின்டன், எட்வின்மான்சிங், அப்துல்கனி, ஜேகன்எக்ஸ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

செய்திகள் – ஆனந்த்
நிழல்.இன் – 8939476777