“சல்பேட்டா” குத்துசண்டையை இந்த தலைமுறைக்கு நினைவுபட்டுத்த முயலும், பா.ரஞ்சித்…
1 min read
பா.ரஞ்சித் இயக்கத்தில் பழைய வடசென்னையின் பிரபலமான விளையாட்டாக இருந்து வந்த குத்துச் சண்டையை மையமாக கொண்டு சல்பேட்டா திரைப்படம் உருவாகி வருகிறது.

இதுவரை நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் ஆர்யா நடித்து வருகிறார். ரஞ்சித்தின் நெருங்கிய நண்பர் கலையரசன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முழுக்க முழுக்க குத்துச்சண்டை நிறைந்த திரைப்படம் என்பதால், நடிகர் ஆர்யா அதற்காக தீவிரமான குத்துச் சண்டை பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் வீடியோவை வெளியிட்டதை அடுத்து இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே மேலும் கூடியுள்ளது.

குத்துச்சண்டை வீரர் கலகலப்பான திரைப்படங்களில் காமெடி நடிகர்களுடன் இணைந்து கலக்கி பெண்களின் கனவு நாயகனாக வலம் வந்த நடிகர் ஆர்யா இப்பொழுது இதுவரை நடித்திராத வித்தியாசமான வேடத்தில் குத்துச்சண்டை வீரராக நடித்து வரும் சார்பட்டா திரைப்படத்தை இயக்குனர் பா ரஞ்சித் இயக்கி வருகிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான காலா, கபாலி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி இந்திய அளவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த பா.ரஞ்சித் இப்பொழுது இயக்கி வரும் சல்பேட்டா திரைப்படம் பழைய வடசென்னையின் குத்துச்சண்டையை மையமாகக்கொண்டு உருவாகி வரும் திரைப்படம் என சொல்லப்படுகிறது.

மெட்ராஸ் திரைப்படத்தில் வடசென்னையின் கதையை கையில் எடுத்து வெற்றி கண்ட இயக்குனர் பா ரஞ்சித், இப்பொழுது இரண்டாம் முறையாக வடசென்னையை மையப்படுத்தி எடுக்கும் இந்த திரைப்படத்திற்கு மேலும் எதிர்பார்ப்பு கூடியுள்ளது. அதிலும் சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் சார்பட்டா திரைப்படத்தை பார்த்துவிட்டு படக்குழுவை பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

உடம்பை தாறுமாறாக ஏற்றி இந்த கதாபாத்திரத்திற்காக நடிகர் ஆர்யா எடுத்துக்கொண்ட மெனக்கெடல் என்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாது அந்த அளவிற்கு தனது உடலை கடுமையாக வருத்திக்கொண்டு உண்மையான குத்துச்சண்டை வீரர்களைப் போல உடம்பை தாறுமாறாக ஏற்றியுள்ள ஆர்யாவின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை வாய் பிளக்க வைத்தது.

வெறித்தனமான சண்டை சல்பேட்டா திரைப்படத்தை பற்றிய பல அப்டேட்கள் அவ்வப்போது வெளியாகி வரும் நிலையில், இந்த ஆண்டு (2021) திரையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் இப்பொழுது ஆர்யா தீவிரமான குத்துச் சண்டை பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் பயிற்சியாளரே அசந்து போகும் அளவிற்கு சுழன்று சுழன்று அடிக்க பார்க்கும் அனைவரையும் மிரட்டி வரும் ஆர்யாவின் இந்த வெறித்தனமான சண்டைப் பயிற்சி வீடியோ இப்பொழுது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

செய்திகள் – லெனின் லோகேஷ்
நிழல்.இன் – 8939476777