தமிழ்நாடு பத்திகையாளர் சங்கத்தின் சமத்துவ பொங்கல் விழா…
1 min read
ஜாதி மதங்களை, மாநில மொழிகளைக் கடந்து, மனித நேயத்தை மட்டுமே உயர்த்திப் பிடிக்கும் ஒரு விழா, தமிழர் திருநாளாம், தை பொங்கல் திருவிழா, இவ் விழா.. தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க தலைமையகத்தில், மாநில தலைவர் சுபாஷ் அவர்கள் தலைமையில் சமத்துவப் பொங்கல் விழாவாக நடைபெற்றது.

இது விவசாய விழாவாக இருந்தாலும், இது இந்துக்களுக்கானது மட்டுமல்ல. எல்லா சமயத்தினருக்கும், எல்லா மதத்தினருக்கும் இந்தியா சொந்தம் – இவ்விழாவும் சொந்தம்.
பௌத்த மதம் தோன்றியது
பீகார் புத்தகயாவில்.
சீக்கிய மதம் தோன்றியது பஞ்சாபில்.
பெத்தலேமில் பிறந்து, நாசரேத்தில் வளர்ந்து, பாலஸ்தீனத்தில் ஏசு மறைந்தாலும், கிருத்துவ மதம் ஐரோப்பியா, ஆஸ்திரேலியா,அமெரிக்கா, இந்தியா எனப் பரந்துள்ளது.

மெக்காவில் பிறந்து, மதீனாவுக்கு ஓடி, மாமன்னனாக கோலோச்சிய இறைத்தூதனான நபிகளின் மதம் அரேபியா மத்திய கிழக்கில் தோன்றியது.
இந்திய மண் இஸ்லாமியர்களுக்கும் சொந்தமானது. வணிகம், கலை இலக்கியம், கட்டிடக்கலை இவர்களால் மேன்மையுற்றது.
ஆகவே, கிருத்துவ மதத்தினருக்கும் இஸ்லாமிய மதத்தினருக்கும்
இந்த நாடு சொந்தமானது.
இஸ்லாமிய தோழனே!
கிருத்துவ தோழனே!
நீயும் இந்த மண்ணின் மைந்தன், இந்த தேசம் உனக்கானது

இதோ உன் வாழ்வோடும் தாழ்வோடும்,
உன் இன்பத்தோடும் துன்பத்தோடும்,
உன் சுக துக்கங்களையும்
தோளோடு தோள் கொடுத்து பகிர்ந்துக்கொள்ளும்
இந்து சகோதரனாக
இதோ நான் இருக்கிறேன். வா நாம் பகிர்ந்துண்போம் என பிரகடனம் செய்யும் நிகழ்வுதான் இந்த சமத்துவ பொங்கல் விழாவின் நோக்கம்.
பத்திகையாளர்களான, நாம் அனைவரும் இணைந்து இதர சமயத்தாரோடு சேர்ந்து கிருஸ்துமஸ் விழா கொண்டாடுவோம், இப்தார் நோன்பு விழா கொண்டாடுவோம், சமத்துவ பொங்கலையும் கொண்டாடுவோம்.

நாம் அனைவரும் இந்த பூமித்தாய் வயிற்றுப் பிள்ளைகள். சாதி, இன, பேதமின்றி வருங்கால சந்ததியினருக்கு ஒரு எடுத்துக் காட்டாக வாழ்ந்து காட்டுவோம்.

“அம்மா” டி.சசிகலாதேவி ரவீந்திரதாஸ்,
இணை ஆசிரியர் – பத்திரிகையாளர் குரல்.
நிழல்.இன் – 8939476777