திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், சமத்துவ பொங்கல் விழா…
1 min read
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.அரவிந்த் அவர்களின் தலைமையில், திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆயுதப்படை அலுவலகம் முன்பு, தமிழர் திருநாளான தைப்பொங்கல் விழா, பொங்கல் வைத்து பாரம்பரிய விளையாட்டுக்களுடன் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் அனைத்து மத பிரிவுகளிலிருந்தும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் திருமண்ணாமலைக்கு வருகை தந்த சில வெளிநாட்டவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். தலைமையிட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் T.அசோக் குமார் அவர்கள், திருவண்ணாமலை நகர உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் D.V.கிரண் சுருதி அவர்கள், மனித உரிமைகள் மற்றும் சமூக நீதிப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் R.ரமேஷ் அவர்கள், தனிப் பிரிவு காவல் ஆய்வாளர் R.சசிகுமார் அவர்கள், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் A.ராஜேந்திரன் அவர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் தங்களது குடும்பத்துடன் சமத்துவ பொங்கல் கொண்டாட்டதில் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீர்த்தவாரி…

இன்று திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் உத்தராயண புண்யகால தீர்த்தவாரி தாமரை குளக்கரையில் நடைபெற்றது.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல்.இன் – 8939476777