புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகாவிற்கு உட்பட்ட மீமிசல் அருகிலுள்ள கடவா கோட்டை கண்மாய் உடைப்பு ஏற்பட்டு பெரும் பாதிப்பு…
1 min read
ஆவுடையார் கோயில் தாலுகா, கடவா கோட்டை கண்மாய் சுமார் 150 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த கண்மாயில் தற்போது பெய்த கோர மழையால் உடைப்பு ஏற்பட்டு, அடைக்க முடியாமல் பொதுமக்கள் அவதிபட்டு வருகின்றனர். இந்த ஊரைச் சுற்றி உள்ள விளைநிலங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி போயின அதனால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்ப்பட்டுள்ளது.

தகவல் அறிந்து, தற்பொழுது அறந்தாங்கி உதவி ஆட்சியர் ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் மற்றும் வருவாய் துறையினர் கோட்டைப்பட்டினம் காவல் துணை கண்காணிப்பாளர் உட்பட காவல்துறையினர், தீயனைப்பு துறைனர் அனைவரும் பொதுமக்கள் உதவியுடன் கம்புகளை நட்டு, மரங்கள் போன்ற நீரில் கரையாத கடின பொருட்களை வைத்து தடுப்பு ஏற்படுத்தி, பின்னர் மண் மூட்டைகளை அடுக்கி, கம்மாயில் இருந்து வெளியேறும் நீரை தடுக்க முற்பட்டு வருகின்றனர்.

இந்தக் கண்மாய் உடைப்பு ஏற்பட்ட காரணத்தால் அந்த கிராமத்தை சுற்றியுள்ள சுமார் ஏழு கிராமங்களில் உள்ள நூற்றுகணக்கான விளை நிலங்கள் பாதிக்கப்பட்டு உள்ளது. அந்த ஊரில் உள்ள பல வீடுகளிலும் தண்ணீர் புகுந்து பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

கனமழையின் காரணமாக கண்மாய் உடைப்பு ஏற்பட்டு நீர் வீடுகளுக்குள் புகுந்தது
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் தாலுகாவிற்கு உட்பட்ட கடவாக்கோட்டை கிராமத்தில் கண்மாய் உடைப்பு ஏற்ப்பட்டு தண்ணீர் ஊருக்குள் புகுந்தது
அதனால் அங்கு உள்ள கிராம மக்கள் வெள்ளத்தில் தத்தளித்தனர்,
தகவல் அறிந்த மாவட்ட ஆட்சி தலைவர் உமாமகேஷ்வரிி அவர்கள் இன்று மாலை நேரில் கடவாாகோட்டை வந்து, அங்கு உள்ளவர்களுக்கு ஆறுதல் கூறிினார்.

செய்திகள் – ஆனந்த்
நிழல்.இன் – 8939476777