பெரியகுளம் வளர்ச்சிப் பேரவை சார்பில், முப்பெரும் விழா மிக விமர்சியாக நடந்தது…
1 min read
தேனி மாவட்டம், பெரிய குளத்தில், பெரியகுளம் வளர்ச்சிப் பேரவை சார்பில், இளைஞர்கள் எழுச்சி தினம், நூல் வெளியிட்டு விழா, மற்றும் தன்னார்வலர்களுக்கு பாராட்டு விழா, என்று முப்பெரும் விழா மிக சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில், நல்லாசிரியர் ஏ.சி.சிவபாலு எழுதிய தமிழ் இமயங்களை வணங்கி மகிழ்கின்றேன் என்ற நூலை மணிமேகலை பிரசுரம் நிர்வாக இயக்குநர் முனைவர். ரவி.தமிழ்வாணன் வெளியிட்டார்.

நூலின் முதல் பிரதிகளை புலவர்.இராசரத்தினம், மணி கார்த்திக், பெரியகுளம் வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சந்திரசேகரன், மருத்துவர் செல்வராஜ், சில்வர் ஜூப்ளீஸ் போர்ட்ஸ் கிளப் செயலாளர் சிதம்பரசூரியவேலு, குருதட்சிணாமூர்த்தி அறக்கட்டளை தலைவர் சரவணன், ஜே.சி. குரூப் ஆப் கம்பெனி ஹேமந்த் ,பெரியகுளம் நகர் நலச் சங்கச் செயலர் அன்புக்கரசன், பொறியாளர் ஆறுமுகம், பண்ணை கார்த்திகேயன், நகராட்சி ஆணையாளர் அசோக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், பெரியகுளம் காவல் துணைக் கண்காணிப்பாளர் முத்துக்குமார், பெரியகுளம் காவல் ஆய் வாளர் சுரேஷ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

பொறியாளர் நித்தியானந்தம், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பன்னீர்செல்வம், பொருளாளர் இராஜவேலு, ராஜ்குமார், பசுமை தோழர்கள் வெங்கடேசன், விஜயகுமார், வடகரை நூலகர் வாசகர் வட்ட தலைவர் ஆலிம் அஹமது முஸ்தபா, உட்பட பலர் வாழ்த்துரை வழங்கினார்கள். இவ்விழாவில் புரவலர்கள், பொதுமக்கள், பெரியகுளம் வளர்ச்சி பேரவையினர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் இவ்விழாவில் கொரோனா தடுப்பு பணிகளில் சிறப்பாக செயல்பட்ட தன்னார்வலர்கள், இரத்ததானம் செய்த நபர்கள், சுகாதார ஆய்வாளர், கல்வி மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகள், சமூக சேவகர்கள், நூலகர்கள், நல் நூலகர் சவடமுத்து உட்பட பலருக்கும் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

செய்திகள் – அழகர்
நிழல்.இன் – 8939476777