ஜனவரி 19ல், 10, மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வரவேற்ப்பு…
1 min read
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் அருணன் அவர்கள் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருபதாவது, கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பித்து தொற்று பரவாமல் இருக்க பள்ளிகள் கல்லூரிக்கு கடந்த பத்து மாதங்களுக்கும் மேலாக விடுமுறை விட்ட நிலையில், தமிழக அரசு வரும் 19ம் தேதி முதல் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு என்பதால், பள்ளிகளை திறக்க உத்தரவிட்டுள்ளது.

மாணவர்களின் நலன் காத்திடும் வகையில் அரசு அறிவித்திருக்கும் வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்றி அனைத்து முன் எச்சரிக்கைகள் அனைத்தையும், மேற்கொண்டு பள்ளிகளை திறக்க வேண்டும். அரசுப் பள்ளி மாணவர்கள் நிலை அறிந்து பாடத்திட்டத்தின் அளவை எவ்வாறு குறைக்கப்பட்டுள்ளது என்பதை மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். அதன்படியே பாடத்திட்ட புத்தகத்தை மாணவர்களுக்கு வழங்கி பாடம் நடத்த அரசு ஏற்பாடு செய்ய செய்ய வேண்டும் , குறைக்கப்பட்ட பாடத்தில் இருந்தே தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் ,

விடுதியில் தங்கி பயிலும் மாணவர்களுக்கு பனிக்காலம் என்பதால் தனித்தனியே படுக்கை விரிப்புகள் கட்டில்கள் தயார்நிலை படுத்த வேண்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒன்றிய அளவில் நடமாடும் மருத்துவ சேவையை ஏற்படுத்த வேண்டும். என தமிழக அரசை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வேண்டிக் கேட்டுக்கொள்வதாக கூறியிருந்தார்.

செய்தியாளர் – மகேஷ்
நிழல்.இன் – 8939476777