திருவண்ணாமலையில் நலத்திட்ட உதவிகள் வழங்கி திருவள்ளுவர் தினவிழா கொண்டாட்டம்…
1 min read
உலக பொதுமறை என்று போற்றப்படும் திருக்குறளை தந்து வான் புகழ் பெற்றவர் திருவள்ளுவர். திருக்குறளில் இல்லாத கருத்தே இல்லை என்பது அறிஞர்களின் கூற்றாக உள்ளது. இதன் பெருமையை உணர்ந்து பல்வேறு மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

2,052-ம் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலையில் செயல்பட்டு வரும் வள்ளுவர் குல மக்கள் முன்னேற்ற சங்கம் சார்பில், நேற்று திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிறுவன தலைவர் டாக்டர் எம்.விஜயகுமார் தலைமை தாங்கினார்.

இதில், செயல்தலைவர் பிரபுநாத சித்தர், மகளிர் அணி தலைவர் ஞானமணி, நிர்வாக குழு உறுப்பினர்கள் ஆர்.சிவசங்கரன், தண்டபாணி,செயற்குழு உறுப்பினர் பழனிச்சாமி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட தலைவர் பாரதஜோதி எம்.ஆர்.பாஸ்கரன்,ஹரிகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு ரமணஸ்ரமம் அருகில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோருக்கு புத்தாடைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
செய்தியாளர் – மூர்த்தி
நிழல்.இன் – 8939476777