தேனி அருகே திருவள்ளுவர் பிறந்த நாள் கொண்டாட்டம் வெகு சிறப்பாக சிறப்பாக நடைபெற்றது…
1 min read
மாவட்டம் , போடிநாயக்கனூரில் திருவள்ளுவர் பிறந்த தினத்தில், திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தமிழ் மொழியின் புலமையை 1330 குறளில், உலகறியச் செய்து, தமிழையும், தமிழர்களையும், உலகளவில் அடையாளம் காணச் செய்த சங்க காலப் புலவரான, தெய்வப் புலவர் திருவள்ளுவரையும், திருக்குறளையும் போற்றும் விதமாகவும், தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு, திருவள்ளுவர் சமூகத்தினரின் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில், திருவள்ளுவர் சமூகத்தினர் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

செய்தியாளர் – அழகர்
நிழல்.இன் – 8939476777