March 1, 2021

அறந்தாங்கி அருகே, மணலூர் கிராமத்தில், வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுமி சம்பவ இடத்திலேயே பலியானார் …

1 min read

புதுகோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே, மணலூர் கிராமத்தில், வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுமி இடத்திலேயே பலியானார். மறைந்த சிறுமியின் குடும்பத்தார்க்கு ஆறுதல் கூறி மணமேல்குடி ஒன்றிய திமுக சார்பில், ரூபாய் 2லட்சம் நிதியுதவியை புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் திருமயம் சட்டமன்ற உறுப்பினர், எஸ்.ரகுபதி அவர்கள் வழங்கினார்கள்.

உடன் மாநில தேர்தல் பணிக்குழு செயலாளரும் மணமேல்குடி ஒன்றிய பெருந்தலைவர் பரணி, இ.ஏ.கார்த்திகேயன், மணமேல்குடி ஒன்றிய கழக செயலாளர் சக்தி, இராமசாமி , அறந்தாங்கி முன்னாள் நகர செயலாளர் க.இராஜேந்திரன், மஞ்சக்குடி வீரையா, மாணவர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் கலைசெல்வன், திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் ஹரி, விமலாதி, பிரபுராமன், நெப்போலியன், ஆகியோர் உடனிருந்தனர்.

செய்திகள் – ஆனந்த்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed