March 2, 2021

ஆவடியில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவிற்க்கு வருகை தந்த மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு…

1 min read

திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக சார்பில், சமத்துவ பொங்கல் விழா ஆவடி மாநகரம், கோணாம்பேடு கிராமத்தில் நேற்று முன்தினம் மாலை நடந்தது. விழாவிற்கு, மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர் தலைமை தாங்கினார். பூந்தமல்லி எம்.எல்.ஏ ஆ.கிருஷ்ணாசாமி வரவேற்றார். ஆவடி நகர பொறுப்பாளர்கள் பேபி வி.சேகர், ஜி.ராஜேந்திரன், ஜி.நாராயணபிரசாத், பொன்.விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில், கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தமிழர் பாரம்பரிய முறையில் பெண்களுடன் பொங்கல் வைத்தார். இதனை அடுத்து, பொய்கால் குதிரை ஆட்டம், சிலம்பாட்டம், கிராமிய இசை கச்சேரி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தது. மேலும், திருவள்ளூர் மத்திய மாவட்ட எல்லை முதல் விழா மேடை வரை மாவட்ட செயலாளர் சா.மு.நாசர் தலைமையில் கட்சி நிர்வாகிகள் தாரை, தப்பட்டை முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதோடு மட்டுமல்லாமல், வழியெங்கும் சாலையின் இருபுறங்களிலும் கொடிகள், டிஜிட்டல் பேனர்கள், வரவேற்பு வளைவுகள் வைக்கப்பட்டிருந்தன.
நிகழ்ச்சியில், சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியம், மாநில மாணவரணி இணை அமைப்பாளர் பூவை சி.ஜெரால்டு, மாவட்ட துணைச்செயலாளர்கள் நடுகுத்தகை ஜெ.ரமேஷ், காயத்ரி ஸ்ரீதரன், பொதுக்குழு உறுப்பினர்கள் எம்.ராஜி, ஜி.ஆர்.திருமலை, ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் என்.இ.கே.மூர்த்தி, தி.வை.ரவி, பூவை ஜெயக்குமார், டி.தேசிங்கு, புஜ்ஜி ராமகிருஷ்ணன்,

காக்களூர் ஜெயசீலன், பூவை ரவிக்குமார், கோடுவெளி முரளி, வே.முனுசாமி, துரை வீரமணி, ஒன்றிய குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பிரபு கஜேந்திரன், துணை அமைப்பாளர் பா.நரேஷ்குமார் மற்றும் ஆர்.சுதாகரன், ஈக்காடு கே.முகம்மது ரபி, எம்.பர்கத்துல்லாகான், ஜெ.சுதாகர், எஸ்.அசோக்குமார் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர், கிளை நிர்வாகிகள், அனைத்து அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தொண்டர்கள், பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – மகேஷ்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed