திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில், ஒரு டன் எடையுள்ள டால்பின் இறந்த நிலையில், கரை ஒதுங்கியது…
1 min read
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியானது சுற்றுலா மற்றும் மீன்பிடி பகுதியாகும். இங்கு தினசரி மீன் தொழில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று பழவேற்காடு முகத்துவாரம்த்தின் வழியாக, டால்பின் மீன் ஒன்று இறந்த நிலையில் பழவேற்காடு ஏரியில் அடித்து வரப்பட்டு கரை ஒதுங்கியது.

மாட்டுப் பொங்கல் தினம் என்பதால் பொதுமக்கள் யாரும் ஏரி பகுதிக்கு செல்லவில்லை. இன்று காணும் பொங்கல் மீனவர்கள் யாரும் பழவேற்காட்டில் மீன் பிடிக்கச் செல்லவில்லை. இதனால் மீன் கரை ஒதுங்கியதை எவரும் கவனிக்கவில்லை.

இந்த நிலையில் கரை ஒதுங்கிய மீனில் இருந்து துர்நாற்றம் வரவே அப்பகுதி மக்கள் சென்று பார்த்தபோது சுமார் ஒரு டன் மதிப்புள்ள டால்பின் கரை ஒதுங்கியது தெரியவந்தது. இது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. மீனில் இருந்து துர்நாற்றம் அப்பகுதி முழுவதும் வீசுவதால் பொதுமக்கள் முகம் சுளித்த வண்ணம் அப்பகுதியில் செல்கின்றனர்.
செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல்.இன் – 8939476777