திருவள்ளூர் வீரராகவர் பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ திருவிழாவின், தேரோட்டம் நடைபெற்றது…
1 min read
திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவ பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழா கடந்த 9-ஆம் தேதி தொடங்கியது. இதில் பெருமாள் காலை மற்றும் மாலையில் சர்வ அலங்காரத்துடன் நாள்தோறும் மக்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

கொரோனா பெருந்தொற்று காரணமாக வழக்கமாக நடைபெறும் தேரோட்டத்துற்கு பதிலாக சிறிய அளவிலான தேரோட்டம் சன்னதி தெருவில் மட்டும் நடைபெற்றது. இந்த பிரம்மோற்சவ விழாவில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து கிருமிநாசினி பயன்படுத்தியும் அனுமதிக்கப்படார்கள்.

பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக 7-ஆம் நாளான இன்று வீரராகவர் கோயிலின் 60 அடி உயரமும், 21 அடி அகலமும் கொண்ட திருத்தேர் பவனி நடைபெறுவது வழக்கம். குறிப்பாகத் இந்தத் தேர் தேரடியில் இருந்து புறப்பட்டு பனகல் தெரு, குளக்கரை சாலை, பஜார் வீதி, வடக்கு ராஜவீதி, மோதிலால் தெரு வழியாக தேர் மீண்டும் தேரடியை வந்தடைவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக சுவாமி திருவீதி புறப்பாடு ரத்து செய்யப்பட்டு கோவிலை சுற்றி வந்து வாகன மண்டபத்தில் எழுந்தருள்வார் என கோயில் நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

இதனால் கோயில் நிர்வாகம் சார்பில் 26 அடி உயரமும், 12 அடி அகலமும் கொண்ட சிறிய தேர் உருவாக்கி அந்தத் தேர் சன்னதி தெருவில் உள்ள நாலுகால் மண்டபத்தை சுற்றி வலம் வந்து உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் வீரராகவர் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

செய்தியாளர் – மகேஷ்
நிழல்.இன் – 8939476777