திருவண்ணாமலை, கலசபாக்கத்தில், 99வது ஆண்டாக நடைபெற்ற காளை விடும் விழா-100க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்ப்பு…
1 min read
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட ஆதமங்கலம் புதூர் கிராமத்தில் 99வது ஆண்டாக காளை விடும் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவினை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம், மற்றும் விழா குழுவினருடன் தொடங்கி வைத்தார்.

ஆதமங்கலம் புதூர் பகுதியில் கடந்த 98 ஆண்டுகளாக காளைவிடும் விழா கோலாகலமாக நடைபெற்று வந்த நிலையில், இன்று காணும் பொங்கலையொட்டி 99வது காளை விடும் விழா இன்று நடைபெற்றது. இதில் ஆதமங்கலம் புதூர், மேல்சோழங்குப்பம், சிறுவள்ளுர், வீரளுர், ரெட்டியார்பாளையம்,கேட்டவரம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட காளைகள் இந்த காளை விடும் விழாவில் பங்கேற்றது.

இந்த காளைவிடும் விழாவினை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர் செல்வம், திருவண்ணாமலை பாராளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை மற்றும் விழாக்குழு உறுப்பினர் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்று துவக்கி வைத்தனர். பல்லாயிரக்கணக்கான சுற்றுபுற கிராம மக்கள் இந்த காளை விடும் விழாவினை குடும்பத்தினருடன் உற்ச்சாகமாகவும், ஆரவாரத்துடனும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல்.இன் – 8939476777