தேனி அருகே திருமண ஏற்பாடு பிடிக்காததால் பட்டதாரி இளம்பெண் தற்கொலை…
1 min read
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில், திருமண ஏற்பாடு பிடிக்காததால் பட்டதாரி
இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரித்து
வருகின்றனர். போடி சுப்புராஜ் நகரை சேர்ந்தவர் கருப்பையா (60). இவரது மகள் நித்யா (21) இவர் பி.எஸ்.சி. கம்யூட்டர் சயன்ஸ் படிப்பு படித்துவிட்டு வேலை தேடி வந்தார். இந்நிலையில், பெற்றோர் இவருக்கு திருமணம் செய்ய மாப்பிள்ளை பார்த்து வந்தனர். தற்சயம் திருமண ஏற்பாடுகள் வேண்டாம் என கூறி வந்த நிலையில், நித்யா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, கருப்பையா கொடுத்த புகாரின் பேரில், போடி நகர் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தேனி அருகே, மோட்டார் பைக் மோதியதில் முதியவர் படுகாயம்…

தேனி மாவட்டம் , தேவாரம் அருகே நடந்து சென்ற முதியவர் மீது மோட்டார் பைக் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த முதியவரை மீட்டு போலீஸார் விசாரித்து வருகின்றனர். தேவாரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் மாயாண்டி (70). இவர் தேவாரம் அருகே உறவினரின் இறுதி சடங்கில் கலந்து விட்டு சாலையோரம் நடந்து வந்துள்ளார். அப்போது வேகமாக வந்த மோட்டார் பைக் இவர் மீது மோதியது. அதில் கீழே விழுந்த மாயாண்டி பலத்த காயமடைந்தார். தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல்
சிகிச்சைக்கு மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து, இவரது உறவினர் பிரபாகரன் கொடுத்த புகாரின் பேரில் தேவாரம் தெற்கு
தெருவை சேர்ந்த முருகன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

செய்தியாளர் – அழகர்
நிழல்.இன் – 8939476777