புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில், 104வது எம்ஜிஆர் பிறந்தநாள் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது…
1 min read
அறந்தாங்கி அதிமுக நகர செயலாளர் ஆதிமோகனக்குமார் தலைமையில்,
அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இரெத்தினசபாபதி, தெற்கு ஒன்றிய செயலாளர் பெரியசாமி, வடக்கு ஒன்றிய செயலாளர் வேலாயுதம் ஆகியோர் முன்னிலையில், அக்கட்சியினர் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பெரிய கடைவீதி பகுதியில் உள்ள எம்ஜிஆர் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில், அதிமுக நகர பொருளாளர் சோலைராஜ் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் மண்டலமுத்து, R.R.செல்வம், முருகேஷன், மனேகரன், மகளிரணி செயலாளர் கலாராணி, மற்றும் அதிமுக அனைத்து பிரிவு அணி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் – ஆனந்த்
நிழல்.இன் – 8939476777