மீஞ்சூர் ஒன்றியம் அனுப்பம்பட்டில், எம்.ஜி.ஆர் 104 வது பிறந்தநாள் கொண்டாட்டம்…
1 min read
மீஞ்சூர் ஒன்றியம் அனுப்பம்பட்டு ஊராட்சியில், அம்மா பேரவையின் மீஞ்சூர் ஒன்றிய பொருளாளரும், அனுப்பம்பட்டு கூட்டுறவு சங்க தலைவருமான உமாமகேஸ்வரன் சிறப்பான ஏற்பாடு செய்து இருந்தார்.

அனுப்பம்பட்டில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு உமாமகேஸ்வரன் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செய்து, வணங்கினார். அப்போது அனுப்பம்பட்டு கிளை செயலாளர்கள் மற்றும் மகளிர் அணியினர், உட்பட பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். அதேபோல், பெரிய அனுப்பம்பட்டு மற்றும் திடீர் நகர் பகுதிகளிலும் எம்.ஜி.ஆர் திருவுருவ படத்திற்க்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

சோழவரம் ஒன்றியம் ஆத்தூர் ஊராட்சியில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்…

சோழவரம் ஒன்றியம் ஆத்தூர் ஊராட்சியில், நடைபெற்ற எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில், ஆத்தூர் ஊராட்சிமன்ற தலைவர் எம்.ஜி.ஆர் திருவுருவ படத்திற்க்கு மாலை அணிவித்து மலர்தூவி வணங்கினார். அப்போது ஆத்தூர் கிளைகழக நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

செய்தியாளர் – பூர்ணவிஷ்வா நிழல்.இன் – 8939476777