அறந்தாங்கியை சேர்ந்த, கவிஞர் ஜி.வி அவர்களுக்கு, “தமிழ் செம்மல்” விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது…
1 min read
அறந்தாங்கியை சேர்ந்தவர் கவிஞர் ஜி.வி … இவர் தமிழக சுகாதாரத்துறையில் 37 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இவர் தமிழக பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்க மாநில தலைவராகவும் . தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநிலக்குழு உறுப்பினராகவும் . பொதுசுகாதாரத்துறை மாவட்ட நலகல்வியாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.

இலக்கியத்துறையில் இவர் இது வரை 13 நூல்களை எழுதியுள்ளார். அதில் இவர் எழுதிய வானம் தொலைந்து விடவில்லை, நைலான் ஊஞ்சல்கள், ஜீ.வி கவிதைகள், அடித்து பெய்த மழை, போன்ற நூல்கள் பிரபலமானவை.

மேலும் இவரது நூல்கள் ஆங்கிலம் மற்றும் மலையாள நூல்களில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது, என்பது குறிப்பிடதக்கது. இவர் இதுவரை 1000 க்கும் மேற்பட்ட பட்டிமன்ற நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பேச்சாளராகவும் பங்கு கொண்டுள்ளார்.

பிரபல தனியார் தொலைக்காட்சிகளில் விவாத நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார். இவரது கவிதை நூல்களை ஆய்வு செய்து பேராசிரியர்கள் எம்.பில் பட்டம் பெற்றுள்ளனர்.

இப்படி எழுத்து துறையில் பல சாதனை செய்துள்ள இவருக்கு, தற்போது தமிழக அரசு “தமிழ் செம்மல்” விருதை அறிவித்து அதற்கு ரொக்கபரிசாக ரூபாய் 25.000 மும், பாராட்டு பத்திரமும் சென்னையில் நடைபெரும் விழாவில் தமிழக முதல்வரின் கரங்கலால் பெற இருக்கிறார். இத்தகவலை அறிந்த இலக்கியவாதிகளும், கவிஞர்களும், சமூக ஆர்வலர்களும், அவரை நேரில் சந்தித்து, தொடர்ந்து பாராட்டிய வண்ணம் உள்ளனர்.

செய்திகள் – ஆனந்த்
நுழல்.இன் – 8939476777