திருவள்ளுர் மாவட்டதில், இறால் பண்ணைகளை அகற்ற, தமிழக அரசுக்கு, இறால் பண்ணை உரிமையாளர்கள் எதிர்ப்பு…
1 min read
திருவள்ளூர் மாவட்டத்தில் ஏராளமான இறால், மற்றும் மீன் பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன, இந்த இறால் பண்ணைகளில் இருந்து. வெளியேற்றப்படும் ரசாயனம் கலந்த கழிவுநீர் நீர்நிலைகளில் கலப்பதால், தண்ணீர் மாசடைந்து பாசனத்துக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் ரசாயன கழிவுகளால் விளைநிலங்கள் பாதிக்கப்படுவதால் தங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருவதாக விவசாயிகள் தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் வகையில் அனுமதியின்றி செயல்படும் இறால் பண்ணைகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
அதன் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் இறால் பண்ணைகளை அகற்ற மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்தது. இதன் காரணமாக மாவட்ட நிர்வாகம் 5 ஆயிரம் இறால் மற்றும் மீன் பண்ணைகளை அகற்றுவதற்கான முன் அறிவிப்பு நோட்டீசை பண்ணை உரிமையாளர்களுக்கு அனுப்பியுள்ளது. இந்த நிலையில் பொன்னேரியில் இறால் பண்ணை உரிமையாளர்கள் நலச்சங்க நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் பசுமை தீர்ப்பாயம் தனது தீர்ப்பில் அனுமதியின்றி புறம்போக்கு இடங்களில் சட்டவிரோதமாக செயல்படும் இறால் பண்ணைகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ள நிலையில், அதிகாரிகள் அதனை கவனத்தில் கொள்ளாமல் முறையான அனுமதி பெற்று சுற்றுச்சூழலுக்கு தீங்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் பட்டா நிலத்தில் செயல்பட்டு வரும், இறால் பண்ணைகளை அகற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவும் இதன் காரணமாக தங்களுக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பை மின்வாரிய அதிகாரிகள் துண்டித்து வருவதாகவும்,

இதனால், இறால் பண்ணையை நம்பி பணிபுரிந்து வரும் 25 ஆயிரம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆகிவிட்டதாகவும். எனவே, இறால் பண்ணைகளின் நிலைகுறித்து முறையாக ஆய்வு செய்து அதன் அடிப்படையில் தகுதியற்ற பண்ணைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், ஒட்டுமொத்தமாக இறால் பண்ணைகளை அகற்ற வழங்கப்பட்ட முன் எச்சரிக்கை நோட்டீசை மாவட்ட நிர்வாகம் திரும்ப பெற வேண்டும், வரதா
புயலின்போது பாதிக்கப்பட்ட தங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிவாரண தொகையை உடனடியாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. தங்களது கோரிக்கையை அரசு நிறைவேற்றத் தவறினால், அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபடுவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
G.பாலகிருஷ்ணன்
நிழல்.இன் – 8939476777