அறந்தாங்கியில் கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் கோரி, விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…
1 min read
சமீபத்தில் பெய்த கனமழையின் காரணமாக அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி, ஆகிய பகுதிகளில் 50,000 ஏக்கரில் விளைந்த பயிர்கள் அறுவடை செய்ய வேண்டிய நிலையில் இருந்த நெற்பயிற்கள், நீரில் மூழ்கி அழுகி சேதமடைந்து.

அதனால், விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்து உளனர். அதனால் பெரும் துயரத்தில் உள்ள அவர்களுக்கு ஏக்கருக்கு தலா 30,000 ம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும், அதேபோல் கனமழையால், சேதமடைந்த வீடுகளுக்கும் நிவாரணம் வழங்க கோரியும், விவசாய சங்கத்தினர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். பின் அதிகாரிகளை சந்தித்து மனு கொடுக்கபட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்க நிர்வாகிகள் தர்மராஜன், மேகவர்ணம், ஜான், செல்லமுத்து, ராசு, ராதா, மாணிக்கம், உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செய்திகள் – ஆனந்த்
நிழல்.இன் – 8939476777