அறந்தாங்கியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி , அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்…
1 min read
அறந்தாங்கியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி , அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் அங்கன்வாடி ஊழியரகளை அரசு ஊழியராக்க வேண்டுமென்றும், அகவிலைப்படியுடன் முறையான ஓய்வு ஊதியம்,குடும்ப ஓய்வூதியம், வழங்க வேண்டுமெனவும், மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரத்தலைவி முத்துலெட்சுமி தலைமை வகித்தார் . மாவட்ட நிர்வாகி பத்மா முன்னிலை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில பொருளாளர் தேவமணி பேசினார்.

மேலும் ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியார் சங்கத்தை சேர்ந்த மகேஸ்வரி, ஆதிஸ்டா, லெட்சுமி, மேரி, சரஸ்வதி, சுமலதா, அந்தோணியம்மாள், ஆனந்தி, ராஜேஸ்வரி, சுகன்யா, சசி உட்பட பலர் கலந்து கொண்டனர் .
செய்திகள் – ஆனந்த்
நிழல்.இன் – 8939476777