திருவண்ணாமலை காவல் துறையின் சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்…
1 min read
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.அரவிந்த் அவர்கள் உத்தரவின்படி, உதவி காவல் கண்காணிப்பாளர் கிரண் சுருதி அவர்கள் மேற்பார்வையில், நகர காவல் ஆய்வாளர் சந்திரசேகர் தலைமையில் நகர உதவி ஆய்வாளர் சுந்தரேசன் மற்றும் போலிசார்லள் சாலை பாதுகாப்பு பிரச்சாரம் செய்யப்பட்டது.

32வது சாலை பாதுகாப்பு மாதம் 20.01.21 முதல் 17.02.21 வரை இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக் கவசம் அணிவதின் அவசியம் குறித்து துண்டு பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.

நகர போக்குவரத்து காவல்துறை மற்றும் நகர உட்கோட்ட காவல் துறையினர் மூலம் தெரு கூத்து கலைஞர்களை கொண்டு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யபட்டது. நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் சுந்தரமூர்த்தி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல்.இன் – 8939476777