March 2, 2021

பெங்களுரில் சசிகலாவுக்கு மூச்சு திணறலாம், அதை கேள்விபட்ட முதல்வருக்கு நெச்சுவலி வந்திருக்குமோ…

1 min read

ஊழல் வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. காய்ச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து அவருக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். காய்ச்சல் தீவிரமடையவே அவர் ஆம்புலன்ஸ் மூலம் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள சசிகலா கடந்த 2017 பிப்ரவரியில் மாதம் பெங்களூருவில் உள்ள சிறைக்கு சென்றார். சிறை தண்டனை முடிவடைந்து விட்ட நிலையில வரும் 27ஆம் தேதி அவர் விடுதலையாக உள்ளார். அதற்கான ஏற்பாடுகளை டிடிவி தினகரன் கட்சித் தொண்டர்கள் செய்து வரும் நிலையில் இன்றைய தினம் பரப்பன அக்ரஹார சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியானது.

கடந்த ஒரு வாரகாலமாகவே சசிகலாவிற்கு காய்ச்சல் அதிகமாக இருந்த நிலையில், இன்றைய தினம் மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து அவருக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
உடல் நல பாதிப்பு அதிகரிக்கவே, சசிகலாவை ஆம்புலன்ஸ் மூலம் சிறையில் இருந்து பெங்கரூவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு தனியார் மருத்துவமனையில் சசிகலாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சசிகலா சிறையில் இருந்து வெளியே வரப்போகிறார் என்று அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சியடைந்திருந்த நிலையில் தற்போது உடல் நல பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவல் பலரையும் கவலையடைய வைத்துள்ளது. குறிப்பாக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி பெரிய அளவில் இருந்து இருக்கும்.

காரணம், முன்னாள் முதல்வர் ஜெயலிதாவின் நினைவிடத்தை, அவர் மறைந்த தினமான டிசம்பர் 5ம் தேதி திறந்திருக்கலாம். இல்லை என்றால், அவர் பிறந்தநாளான பிப்ரவரி 24ம் தேதி திறந்திருக்கலாம். ஆனால், அப்படி முக்கிய நாட்களை எல்லாம் விட்டுவிட்டு ஜனவரி 27 சசிகலா விடுதலையாகும் நாளில், ஜெயலலிதாவின் நினைவிடம் திறப்பதற்க்கு முதல்வர் முடிவு செய்ததற்கு காரணம், “ஊடகங்களும், தமிழக மக்களின் கவனமும் அதே நாளில் விடுதலையாகும் சசிகலாவின் பக்கம் பெரிய அளவில் திரும்பிவிட கூடாது என்று தான்” என்பது தெளிவாக தெரிந்தது.

இந்நிலையில் தான் சசிகலாவின் உடல்நிலை பாதிப்பு செய்தி இப்போது வெளியாகி உள்ளது. இதையும் எல்லோரும் எதிர்பார்த்தது தான். காரணம், இதனால் சசிகலாவின் விடுதலை நாள் முன் கூட்டியோ அல்லது காலதாமாகவோ ஆவதற்க்கு வாய்ப்பு உள்ளது… “குட்டி எட்டு அடி பாய்ந்தால், தாய் பதினாறு அடி பாயும்” என்பது பழமொழி…

G. பாலகிருஷ்ணன்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed