அறந்தாங்கி, கோட்டை பட்டிணத்தில் மாயமான மீனவர்களின் நிலை குறித்து தெரிவிக்க கோரி, மீனவர்கள் மறியல் செய்தனர்…
1 min read
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி,
கோட்டைப்பட்டிணத்தில் இருந்து, கடந்த டிசம்பர் 18ந் தேதி 214 விசைப்படகு மீன்பிடிக்க சென்று 213 படகுகள் மட்டும் கரை திரும்பிய நிலையில், தங்கச்சி மடத்தை சேர்ந்த படகில் சென்ற மண்டபம் சாம்(28) தங்கச்சிமடம் மெசியா(30) செந்தில்குமார்(32) நாகராஜ்(52) ஆகிய நால்வர் சென்ற படகு கரை திரும்பவில்லை.

இந்நிலையில் காணாமல் போனவர்களை மீட்க கோரி, ஜனவரி 19ந்தேதி மறியலும், 20ந்தேதி வேலை நிறுத்தமும் செய்த நிலையில் இன்று 21ந்தேதி 4 பேர்களில் இருவர் இறந்து விட்டதாக தகவல் வருகிறது, மீனவர்களின் நிலை என்னவென்று அதிகாரிடம் தெரிவிக்க கோரியும் மேலும், இலங்கை கடற்படையை கண்டித்தும் இன்று சாலை மறியல் நடந்தது.

இது குறித்து, அறந்தாங்கி சப் கலெக்டர் ஆனந்த்மோகன் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், விரைவில் மீனவர்களின் நிலை குறித்து தெரிவிக்கப்படும் என்று உறுதியளித்ததை தொடர்ந்து, மறியலை கைவிட்டு மீனவர்கள் கலைந்து சென்றனர்.

செய்திகள் – ஆனந்த்
நிழல்.இன் – 8939476777