திருவண்ணமலையில், தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்…
1 min read
திருவண்ணாமலையில், 32வது தேசிய சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு இன்று நடந்த இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி திருவண்ணாமலை அறிவொளி பூங்கா அருகே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மாவட்ட செயலாளர் அம்பேத்வளவன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கண்ணமங்கலம் காவல் நிலையம் சார்பில், இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி தலைமையில் சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு பேரணி பள்ளி மாணவிகள் மூலம் கண்ணமங்கலம் பஜார் வீதியில் நடைபெற்றது. பேரணியில் கண்ணமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சரோஜினி மற்றும் மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர்.
செய்தியாளர் – மூர்த்தி
நிழல்.இன் – 8939476777