மதுரையில், இரண்டு அடுக்கு மாடிக் கட்டிடம் திடீரென ஒருபுறமாக சாய்ந்தால், மக்கள் பீதி…
1 min read
மதுரை தெற்கு வெளிவீதி காஜா தெருவை சேர்ந்தவர் ஜெயபால். இவரது வீட்டின் அருகே, அவருக்கு சொந்தமான 2 மாடிகள் கொண்ட குடியிருப்பு கட்டிடம் ஒன்று உள்ளது. கடந்த சில நாட்களாக மதுரையில் பெய்த தொடர் மழையால் அப்பகுதி முழுவதும் வெகு நாட்களாக தண்ணீர் தேங்கி இருந்தது. இந்த நிலையில் நேற்று திடீரென ஜெயபாலின் இரண்டடுக்கு மாடி வீடு திடீரென, ஒரு புறமாக பூமியில் இறங்கியது.

அதன் ஒரு பகுதி பக்கத்து வீட்டின் மீது சாய்ந்து நின்றது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்பகுதி மக்கள் பீதியில் பதட்டம் அடைந்தனர். அப்போது அந்த குடியிருப்பின் கீழ் தளத்தில் ஒரு பெண்ணும், முதல் தளத்தில் உள்ள ஒரு வீட்டில் மாணவர் ஒருவர் மட்டும் தான் இருந்தனர். திடீரென கட்டிடம் சரியும் சத்தம் கேட்டு அவர்கள் உடனடியாக அங்கு இருந்து வெளியேறினார்கள்.

வீடு சாய்ந்ததில் வீட்டின் முன்புறம் உள்ள பால்கனி, 2 மாடியில் உள்ள கட்டிடங்கள் சிறிதளவு இடிந்து கீழே விழுந்தன. இதனால் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் சேதம் அடைந்தது. இது குறித்து உடனடியாக அப்பகுதி மக்கள் போலீசார் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்தும் தெற்குவாசல் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். பாதுகாப்பு கருதி அந்த பகுதியில் பொதுமக்கள் யாரும் செல்லவும், போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டது. தொடர் மழையால் வீட்டின் கட்டுமானம் பலம் இழந்ததால் வீடு சரிந்தது விசாரணையில் தெரியவந்தது. அந்த வீட்டை இடித்து அகற்ற வேண்டும் என்று உரிமையாளர் ஜெயபாலுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

செய்திகள் – லெனின் லோகேஷ்
நிழல்.இன் – 8939476777